ஹேர் டிரையர் !

நமக்கு நாமே சிகையலங் காரம் செய்யக் கூடிய மிகச்சிறிய ஸைலிஸ்ட் என்கிற டிரிம்மரை வெளியிட் டுள்ளது ஒரு நிறுவனம். இதை டிரையராகவும் பயன்படுத்தலாம். தலைமுடியை வெட்டிக் கொள்ளவும் முடியும். 


பயன்படுத்தித் தூக்கி எறியும் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்கும் சீலிங் போடும் கருவி இது. தொழில் முறையில் இல்லாமல் வீட்டிலேயே கைகளால் இயக்கலாம். காபி, ஜாம் போன்ற வகைகளை சீலிங் செய்ய உதவும்.

தண்ணீர் தொட்டி 
வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொட்டியில் காற்று அழுத்தம் கொடுத்ததும் குறைந்த அளவிலான தண்ணீர் அழுத்தத்துடன் வெளியேறும்.
Tags:
Privacy and cookie settings