நான் எனக்கு, என் கட்சிக்கு ஓட்டு போடுங்கன்னா கேட்கிறேன்: விஜயகாந்த் !

நான் சட்டசபைக்கு வரும்போது வருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி தேமுதிக சார்பில் வியாழக்கிழமை சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
போராட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா வுடன் கலந்து கொண்டார். 

அப்போது விஜயகாந்த் பேசுகையில்,

மதுக்கடைகளை மூடுவதில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமா க இருக்க வேண்டும். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் எல்லாம் மதுக்கடை கள் மூடப்பட வில்லையே என்று அரசு தெரிவிக்கக் கூடாது.

குஜராத் மாநில த்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். 
ஜெயலலிதா எதையுமே சாதிக்கவில்லை. சட்டமன்ற தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கும் விஷயத்தில் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் நன்றாக இருந்தால் எனக்கு போதும்.

ரேஷன் கடைகளில் ஒழுங்காக பொருட்களை வினியோகம் செய்வது இல்லை. எப்பொழுது பார்த்தாலும் அரிசி இல்லை, மண்ணெண்ணெய் இல்லை என்று தான் கூறுகிறார்கள்.

காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தில் சந்தேகமாக இருக்கிறது. மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வல்லவர்கள், நல்லவர்கள்.
எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள், எனக்கு வாக்களியுங்கள் என்று நான் கேட்கவில்லை. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தான் கூறி வருகிறேன். 2016ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும். நான் சட்டசபைக்கு வரும்போது வருவேன் என்றார் விஜயகாந்த்.
Tags:
Privacy and cookie settings