இந்தியாவில் உதவித் தொகையுடன் கூகுள் நடத்தும் கோர்ஸ் !

தகவல் தொழில்நுட்ப யுகத்தின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள், மற்றும் கூகுள் போனின் இயங்கு தளத்தை மேம்படுத்தும் நோக்கில்,
இந்தியாவில் உதவித் தொகையுடன் கூகுள் நடத்தும் கோர்ஸ் !
ஆப்ஸ் டெவலப்பர்களுக்கான பயிற்சி திட்டம் ஒன்றை நேற்று முதல் தொடங்கியுள்ளது. 

இவர்களுக்கான வகுப்புகளை அமெரிக்காவில் உள்ள அந்நிறுவனத்தின் பயிற்றுனர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். 

இந்தியாவில் மென்பொருள் மேம்பாட்டு திறனை அதிகரிக்கும் வகையில் நானோடிகிரி கோர்ஸ் என்ற பெயரில் 

உடாசிட்டி மற்றும் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியளிக்க கூகுள் முடிவு செய்துள்ளது.
ஆயிரம் பேருக்கு உதவித்தொகையுடன் இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இதற்கு இந்திய மதிப்பில் மாதம் சுமார் 9,800 ஆகும். இதில் 50 சதவீதத்தை பயிற்சி முடியும்போது திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings