வருமான வரி செலுத்துவோர் வசதிக்காக வருமான வரித்துறை கூடுதல் வசதிகளுடன், தனது வெப்சைட்டை அப்கிரேட் செய்துள்ளது. வருமான வரி கட்டுவோரை ஊக்குவிக்கும் வகையில், அதன் வெப்சைட் மேம்படுத்தப் பட்டுள்ளது.
www.incometaxindia.gov.in என்ற அந்த வெப்சைட்டில், சிறப்பு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரி செலுத்துவோர் சர்வீஸ்கள் என்ற அந்த லிங்கில் மேலும் பல வசதிகள் கிடைக்கிறது.
எளிதாக வரி செலுத்தும் வகையில், வெப்சைட்டை மேம்படுத்தும்வகையில் இருக்கும்போதுதான், வரி செலுத்துதல் அதிகமாக நடைபெறும் என்று வருமான வரித்துறை நம்புவது இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
இவ்வாண்டு, வெப்சைட் லோடு ஆவதற்கு வெகுநேரம் பிடிப்பதால் பலரும் வரி கட்ட முடியாமல் போனதும் பிறகு, வரி கட்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.