அமெரிக்காவில் பாம்புடன் செல்பி எடுக்க முயன்றதால் ஒன்றரை லட்சம் டொலரை ஒருவர் இழந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் சண்டியாகோ பகுதியைச் சேர்ந்த ஒருவர், தான் வளர்த்த ரேட்டில் வகை பாம்புடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த பாம்பு அவரை கடித்தது. இதனால் அலறித்துடித்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு விஷமுறிவு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
இந்த சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் இருந்து 1,53,161 டொலரை கட்டணமாக பெற்றுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாம்பு கடித்தபோது என் மொத்த உடலும் ஆடிப்போய் விட்டது. கண்களும், நாக்கும் வெளியே வந்த மாதிரி உணரப்பட்டேன்” என்றார்.
Tags: