ரஜினி நடித்து வரும் 'கபாலி' படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது இதனால் , படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'.
சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. மலேசியா படப்பிடிப்பைத் தொடர்ந்து, பாங்காக்கில் படப்பிடிப்பு நிறைவுற்றது. விரைவில் கோவாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.
மலேசியாவில் நடைபெறுவது போல கதை அமைந்திருந்தாலும், இயக்குநர் ரஞ்சித் சரியாக திட்டமிட்டு சென்னையிலேயே மலேசியாவில் நடைபெறுவது போன்ற உள் அரங்கு காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.
மலேசியாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்ட போது, அங்குள்ள படப்பிடிப்பில் இருந்து பாடலை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். 2 நிமிடங்கள் அடங்கிய அப்பதிவு வாட்ஸ்-அப் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது.