வழிதவறி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் திரும்ப ராணுவத்திடம் ஒப்படைப்பு !

வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞரை எல்லை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
 
கடந்த நவம்பர் 12-ம் தேதி இரவில் பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் இக்பால் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் பிடித்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வழிதவறி இந்தியாவுக்குள் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மனி தாபிமான அடிப்படையில் பாகிஸ் தான் ராணுவத்திடம் நேற்றுமுன் தினம் அவர் ஒப்படைக்கப்பட்டார். 

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.எஸ். கட்டாரியா கூறியபோது, இந்த ஆண்டில் இதுவரை 12 பாகிஸ்தானியர்கள் வழிதவறி இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings