நெப்போலியன் ஹீரோவாக நடித்த படம் ‘சீவலப்பேரி பாண்டி’ நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டது.
இந்த படத்தில் நெல்லைத் தமிழ், ஆவேசம், பாசம், வெகுளித்தனம் கொண்ட பாண்டி பாத்திரமாகவே நெப்போலியன் மாறி இருந்தார். இந்த படத்தை பிரதாப்போத்தன் இயக்கினார். இந்த படத்தின் 2–வது பாகத்தை எடுக்கப் போவதாக இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தை தயாரித்த பி.ஜி.ஸ்ரீகாந்த் இந்த 2–ம் பாகத்தையும் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. கவுதம்மேனன் இந்த படத்தை இயக்கப் போகிறார். இதில் கமல் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதற்கான ஒப்புதல் அவரிடம் பெறப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்துக்கான கதை வசனம் எழுதிய சவுமாதான் ‘சீவலப்பேரி பாண்டி–2’ படத்துக்கும் எழுதுகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. கமலுடன் இணைந்து நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.