சென்னையின் வெள்ள பாதிப்பு குறித்த செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, " தேசிய ஊடங்களே.. தமிழ்நாட்டில் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையும் இந்தியாவைச் சேர்ந்தது தான்.
அமீர்கான், ஷீனா போரா விஷயங்களை விட இது முக்கியம். எங்களையும் பாருங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள், இப்போதாவது!" என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் இந்தக் கருத்தை ஆதரிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு லைக்குகளும் ரீட்வீட்களும் பறந்தவண்ணம் இருந்தன.