தந்தை கண்ணெதிரே லாரியில் சிக்கி மகள் பலி; டிரைவருக்கு வலை !

திருவள்ளூரில் தந்தையுடன் பைக்கில் சென்ற மகள், கீழே விழுந்ததில் கன்டெய்னர் லாரியில் சிக்கி, உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தாஸ்.


இவரது மகள் ஸ்ரீமதி(18). சென்னையில் உள்ள அப்போல்லோ பார்மஸி ஒன்றில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். இவரை அவரது தந்தை தாஸ், தினமும் பைக்கில் திருவள்ளூர் ரயில் நிலையம் அழைத்துச் சென்று விடுவது வழக்கம்.

இன்று காலையும் மகளை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆவடி சாலை சந்திப்பு அருகே சென்றுகொண்டு இருந்தபோது, நிலைதடுமாறி பைக் சாய்ந்தது.

இதில், தந்தை ஒருபுறமும், மகள் ஒருபுறமும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரியில் சிக்கிய ஸ்ரீமதி மீது டயர்கள் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி தந்தை கண்ணெதிரே ஸ்ரீமதி பலியானார். இதை பார்த்ததும் தாஸ் கதறி அழுதார்.

லாரி டிரைவர் அங்கேயே லாரியை விட்டுவிட்டு தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து, ஸ்ரீமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். தந்தை கண்ணெதிரே லாரியில் சிக்கி மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings