கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் ஜெயம்ரவி !

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களை தொடர்ந்து சூர்யா, நடிக்க இருந்த படம் ‘துருவ நட்சத்திரம்.’ இப்படத்தின் பூஜைக்கு பிறகு படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதில் இருந்து சூர்யா விலகி விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த படம் அப்படியே நின்றது.
கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் ஜெயம்ரவி
‘தனி ஒருவன்’ படத்துக்கு பிறகு ஜெயம்ரவிக்கு பட வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. அவரை வைத்து படம் எடுக்க பல நிறுவனங்களும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை ஜெயம்ரவியிடம் கவுதம்மேனன் சொல்லியுள்ளார். கதையை கேட்ட அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து துருவநட்சத்திரம் மீண்டும் படமாகிறது. இதில் ஜெயரம்ரவி துருவ நட்சத்திர நாயகனாக ஜொலிக்க இருக்கிறார்.

இந்த படத்தை தயாரிக்க ஒரு நிறுவனம் முன் வந்துள்ளது. அதன்மூலம் துருவநட்சத்திரத்தை உருவாக்கி திரைக்கு கொண்டு வரும் ஏற்பாட்டில் கவுதம் மேனன் தீவிரமாக இறங்கி உள்ளார்.

முதலில் தயாராக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பதாக இருந்தது. இப்போது உருவாகும் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது ஜெயம்ரவி ‘மிருதன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings