மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணனின் மனைவி யும், பிரபல எழுத்தாளருமான கமலா லட்சுமணன் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 89.
கடந்த ஜனவரியில் ஆர்.கே. லட்சுமணன் தனது 94-வது வயதில் மறைந்தார். இந்நிலையில், கமலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. புணே மற்றும் மும்பையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
லட்சுமணன் சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்ந்த நாட்களில், அவருக்கு மிகுந்த உதவிகரமாக கமலா இருந்து வந்தார்.