தங்களின் அபிமான நடிகரின் படம் வெளிவருவதால் தீபாவளிக் கொண்டாட்ட த்திற்காக தயாராகி வருகிறார்கள் அஜித் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்கள்.
அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் கமலின் ‘தூங்காவனம்’ ஆகிய படங்கள் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகின்றன. கமல் என்னதான் சீனியர் நடிகர் என்றாலும் அவரைவிட அஜித்துக்குத்தான் இன்றைய தேதியில் மாஸ் அதிகம்.
கமலைவிட மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கே உண்டு. தவிர, அனைத்து தரப்பினரும் ரசிக்கத்தக்க படமாகவும், ஏ,பி,சி என மூன்று சென்டர் ரசிகர்களுக்குமான படமாகவும் வேதாளம் இருக்கும் என்று ரசிகர்கள் மட்டுமல்ல தியேட்டர்காரர்களும் நம்புகின்றனர்.
எனவே தமிழகத்தில் தூங்காவனம் படத்துக்குக் கிடைத்த தியேட்டர்களின் எண்ணிக்கையைவிட வேதாளம் படத்திற்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
‘தூங்காவனம்’ படத்திற்கு 300 க்கும் குறைவான தியேட்டர்களும், வேதாளம் படத்திற்கு 550 தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டில் அஜித் கிங்காக இருக்கிறார்.
தமிழக நிலவரம் இப்படி என்றால்…. அமெரிக்க நிலவரம் வேறு. உலகஅளவில் தமிழ்நடிகர்களில் ரஜினிக்குத்தான் மிகப்பெரிய மாஸ் இருக்கிறது. அவருக்கு அடுத்த இடத்தில் கமல் இருக்கிறார்.
எனவே, ‘தூங்காவனம்’ படம் அமெரிக்காவில் 102 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அஜித்தின் வேதாளம் 85 தியேட்டர்களில் வெளியாகிறது. இதன்மூலம் அமெரிக்காவில் கமல் தான் கிங்காக இருக்கிறார்.