போலிஸ் அதிகாரியான முதல் இஸ்லாமிய பெண் !

இந்தியாவில் டாக்டராகிவிட்டு போலிஸ் அதிகாரியான முதல் இஸ்லாமிய பெண்..டாக்டர் படித்து போலிஸ் அதிகாரியான ரூவேதா ஸலாம் - சென்னையில் உதவி ஆணையராக(ACP) நியமனம்..
டாக்டர் ரூவேதா ஸலாம் அவர்கள் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் முதல் இஸ்லாமியா பெண் IPS ஆபிஸர் என்பது குறிப்பிடதக்கது.

கஷ்மீரில் சிறிய குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்திலிருந்து படித்து முதலில் அவருடைய கனவான மருத்துவத்தை படித்துவிட்டு பின்பு அவருடைய தந்தையின் கனவான IPS படித்து முடித்து சென்னையில் போலிஸ் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்..
இந்த வீர மங்கையை பாராட்டுவதோடு பணி சிறக்கவும் வாழ்த்துகிறோம்..
இறைவன் உதவிக்கொண்டு இவருடைய பணிகள் மென்மேலும் சிறக்கவும் கண்ணியப்படுத்தவும், இறைவனிடம் பிராத்தனை செய்வோம்..
Tags:
Privacy and cookie settings