எதிர்கட்சியினரை யோசிக்க வைத்த மோடி- ஜெ சந்திப்பு !

சென்னை வந்த பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவிடம் என்னதான் பேசி னார் என்பதுதான் இன்றைய அரசியல் உலகில் பரபரப்பு. அதிமுக - பாஜக இ டையே ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் 60 சீட் முடிவாகியிருக்காமே?
 
என்று ஒருவர் கேட்க இல்லை இல்லை 40 சீட்தான் என்று சிலர் சொல்ல பட்டி தொட்டியில் உள்ள டீ கடைகளில் கூட மோடி- ஜெயலலிதா சந்திப்பு பற்றி தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். 

தேடி வந்த மோடி என்று வார இதழ்களில் தலைப்பு போட்டு கதை கதையாக எழுதுகின்றனர். எதிர்கட்சியினர் வேறு மோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு குறித்து பலவித எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சந் தித்து பேசினார். அப்போது பல்வேறு ஊகங்கள் கிளம்பின. அதிமுக - பாஜக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் தமிழக பாஜக தலைவர்களோ ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே அரசியல் நடத்தி வருகின்றனர்.


சில தினங்களுக்கு முன்னர் மதுரை வந்த பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவும் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், ஊழலுக்கு எதிராக போர டவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். 

மதுரையில் ஆளும்கட்சிக்கு எதிராக அமித்ஷா பேசி 24 மணிநேரம் முடியும் முன்பேயே சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துப் பேசியதோடு மதிய உணவருந்தினார்.

ஜெயா- மோடி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 2016ஆம் ஆண்டு நடைபெறவுள் ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு அமைந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.


இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பா.சிதம்பரம்,ஜெயலலிதாவை சந்திப் பதற்காகவே மோடி சென்னை வந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு மட்டுமல்லாது அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் செல்லா தது குறித்தும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த நிலையில் எதிர்க் கட்சியினரின் கருத்துக்களை முற்றிலுமாக மறுத்துள் ள பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,பாஜக எப்போதும் எந்த ஒரு ஒளிவு மறைவான விசயத்தையும் செய்வதில்லை என்றும்,காங்கிரஸ் கட்சி க்குத்தான் அது அத்துப்படி என கருத்து தெரிவித்துள்ளார். 

இரு தலைவர்களின் சந்திப்பில் எந்த ஒரு அரசியல் காரணமும் இல்லை என கூறிய வெங்கையா நாயுடு,மரியாதை நிமிர்த்தமாகவே இருவரும் சந்தித்த தாக விளக்கம் அளித்துள்ளார்.


எது எப்படியே பிரதமர் மோடியின் தமிழக பயணம், அரசியல் வானில் பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. இந்த சந்திப்பு நட்பு ரீதியானதுதானா? அரசியல் ரீதியானதா? என்பது சட்டசபை தேர்தல் நெருங்கும் போது தெரியவரும்.
Tags:
Privacy and cookie settings