ராகுலின் இங்கிலாந்து குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்... சுப்பிரமணியசாமி !

இங்கிலாந்து குடிமகனாக தன்னை கூறிக் கொண்ட ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம் எழுதி யுள்ளார்.
கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த கடிதத்துடன் சில நம்பகமான ஆவணங்களை இணைத்துள்ளேன். இந்த ஆவணங்கள், இங்கிலாந்தில் 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி பதிவு செய்யப்பட்ட ‘பேக்காப்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் ஆவணங்கள் ஆகும்.

அதன் இயக்குனர் மற்றும் செயலாளராக இருந்தவர், தற்போதைய எம்.பி. ராகுல் காந்தி. 2009-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி, அந்த நிறுவனம் கலைக்கப்பட்டது.

இங்கிலாந்து குடிமகன்

2005-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், ராகுல் காந்தி தன்னை இங்கிலாந்து குடிமகன் என்றதுடன், தனது லண்டன் முகவரியையும் கொடுத்துள்ளார். அன்றைய தேதியில், அந்நிறுவனத்தில் அவர் 65 சதவீத பங்கு வைத்திருந்தார்.

அதுபோல், 2006-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி வெளியிட்ட ஆண்டறிக்கையிலும், ராகுல் காந்தி தன்னை இங்கிலாந்து குடிமகன் என்று கூறியுள்ளார்.

நிறுவனத்தை கலைத்ததை பதிவு செய்த ஆவணத்திலும், தான் அந்நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டபோது இங்கிலாந்து குடிமகனாக இருந்ததாக கூறியுள்ளார். இவையெல்லாம், மேலெழுந்தவாரியாக பார்க்கும்போதே அரசியல் சட்ட மீறல் ஆகும்.

பறிக்க வேண்டும்

ஏனென்றால், அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவின்படி, எந்த இந்திய குடிமகனும், தானாக எந்த வெளிநாட்டு குடியுரிமையும் பெற முடியாது. எந்த எம்.பி.யும், முன்அனுமதி பெறாமல், வெளிநாட்டில் நிறுவனம் தொடங்க முடியாது. அதுபற்றி வேட்புமனுவில் குறிப்பிடாமலும் இருக்கக்கூடாது.

எனவே, அரசியல் சட்ட விதிமீறலில் ஈடுபட்ட ராகுல் காந்தி, இந்திய குடியுரிமையையும், எம்.பி. பதவியையும் பறிப்பதற்கு தகுதியானவர்.

அமெரிக்காவில் பிடிபட்டார்

அதுமட்டுமின்றி, ஜூரிச் நகரை தலைமையிடமாக கொண்ட பிக்டெட் வங்கியில் ராகுல் காந்தி சட்டவிரோதமாக கணக்கில் காட்டாத வங்கி கணக்கு வைத்துள்ளார்.

அது, அமலாக்கப்பிரிவுக்கும் தெரியும். அவர் 2001-ம் ஆண்டு அமெரிக்கா வில் பாஸ்டன் விமான நிலை யத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டார்.

அப்போது, பிக்டெட் வங்கியில் அப்பணத்தை எடுத்ததாக கூறி, அதற்கான ஆதாரத்தையும் காட்டினார். அந்நாளில் பிரதமராக இருந்த வாஜ்பாய் தலையிட்டு, ராகுல் காந்தி பத்திரமாக இந்தியா திரும்ப வகை செய்தார்.

இதுதொடர்பான ஆவணங்கள், பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். ஆகவே, இந்த விவகாரத்தை அவசர பிரச்சினையாக அணுகி, இந்த ஆதாரங்கள் தவறு என நிரூபிக்க ப்படாத பட்சத்தில்,

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையும், எம்.பி. பதவியையும் பறிக்க உடனே ஆணையிடு மாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

காங்கிரஸ் மறுப்பு

இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ‘சுப்பிரமணிய சாமி என்ன சொல்கிறார் என்று தெரிய வில்லை. அவர் செய்தியில் இடம் பிடிப்பதற்காக எதையாவது சொல்லும் பழக்கம் உள்ளவர்’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறினார்.
Tags:
Privacy and cookie settings