தலிபான் தீவிரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவிடம் இருந்து நான்கு ஹெலிகாப்டர்களை வாங்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பாகிஸ்தான் கடும் எரிச்சலடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக் கைகள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதல் களுக்கு தக்க பதிலடி அளிப்பது குறித்து, ஆப் கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
தற்போது அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்களின் பின்னணியில், பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கலாம் என, அவர் சந்தேகிக்கிறார். குறிப்பாக காபூலில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் சதிச் செயல்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா வுடனான ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நல்லுறவை மேம்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக, தலிபான் தீவிரவாதிகளின் வான்வழி தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், இந்தியாவிடம் இருந்து, ரஷ்ய தயாரிப்பான நான்கு ‘எம்ஐ-25’ ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ‘எம்.டி 530’ ரக ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா முன் வந்தது.
இது இலகு ரக ஹெலிகாப்டர் என்பதால், அதைவிட வலுவான வகையில் ஆக்ரோஷமாக போரிடும் ரஷ்ய தயாரிப்பு ஹெலிகாப்டர்களையே வாங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்தே, இந்தியாவிடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக இந்திய அரசிடம், ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் முஹமது ஹனிப் அத்மர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தியாவுடான உறவை வலுப்படுத்தும் வகையில், ஆப்கானிஸ்தான் எடுத்து வரும் இந்த முயற்சியால் பாகிஸ்தான் கடுமையாக எரிச்சல் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.