கணவர் கொடுமைப்படுத்துவதாக பின்னணிப் பாடகி புகார்!

தெலுங்குத் திரைப்படப் பாடகி கெளசல்யா, தன் கணவர் சுப்ரமணியம் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹைதராபாத்திலுள்ள சஞ்சீவ ரெட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 Singer Kousalya files harassment case against husband
1999-ல் நீ கோசம் என்கிற படம் மூலம் தெலுங்கிலும் இதர தென்னிந்திய மொழிகளிலும் பாடிவருகிறார்

கெளசல்யா. தெலுங்கு, தமிழ், கன்னடம் என 400 பாடல்களைப் பாடியுள்ளார். பாடகி கெளசல்யா, நீண்டநாள் நண்பரான சுப்ரமணியத்தைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கௌசல்யா - சுப்பிரமணியத்துக்கு ஒரு மகன் உள்ளார்.
Tags:
Privacy and cookie settings