விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த நாய் இது தான் !

அமெரிக்கன் விமான நிறுவனத்தில் நேற்று காலை பயணித்த ஒரு செல்லப் பிராணி, பயணிகள் விமான வரலாற் றிலேயே முதன் முறையாக முதல் வகுப்பில் பயணம் செய்த உலகின் அதிக எடைகொண்ட செல்லப்பிராணி நாய் என்று கருதப் படுகின்றது.


இதுவரை விமான பயணம் செய்த பயணிக ளிலேயே இதுதான் அதிக எடைகொண்ட பயணியாகவும் இருக்கும் என்றும் கருதப் படுகின்றது.

இந்த நாய் நேற்று காலை விமான நிலையத்தில் தனது சொகுசு படுக்கையின் மீது படுத்தபடி உல்லாசமாக உரிமையாளரால் டிராலி வண்டியில் வைத்து இழுத்து வரப்பட்டது.

விமான நிலைய பணியாளர்கள் முதல் அங்கு வந்த பயணிகள் வரை அனைவரையும் இந்தப் பெரிய நாய் கவர்ந்தது. இந்த நாயின் உரிமையாளர் இரண்டு முதல் வகுப்பு பயணச்சீட்டுகளை வாங்கிக்கொண்டு, தனது நாயுடன் பயணித்ததாக கருதப்படுகின்றது.

அதீத எடைகொண்ட இந்த நாயின் புகைப்படத்துடன் பயணி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த குறிப்பு நான்காயிரம் முறை பகிரப்பட்டிருந்தது. எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நாயின் படத்துக்கு ‘லைக்’ இட்டிருந்தனர்.

பயணிகள் விமானத்தில் அதீத எடையில் உள்ள இந்த நாய் பயணித்துவிட்டது. ஆனால், விண்வெளியில் இன்னும் இதுபோன்ற அதீத எடைகொண்ட நாய் இதுவரை பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings