மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'என்னு நிண்டே மொய்தீன்' திரைப்படத்தை முன்னணி நடிகரை வைத்து விரைவில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
'ப்ரேமம்' படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற காதல் திரைப்படம் 'என்னு நிண்டே மொய்தீன்'. பிருத்விராஜ், பார்வதி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்க, விமல் எழுதி இயக்கியிருந்தார். ஜெயச்சந்திரன் மற்றும் ரமேஷ் நாராயன் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி சுந்தர் பின்னணி இசையமைத்திருந்தார்.
1960ம் ஆண்டு வாழ்ந்த மொய்தீன் மற்றும் காஞ்சன மாலா இருவரின் நிஜக் காதலை மையமாக வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' படத்துக்கு திரைக்கதை அமைத்தார்கள். படம் வசூலிலும், விமர்சனத்திலும் பெரும் வரவேற்பு பெற்றது.
தற்போது இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி, முன்னணி நடிகர் ஒருவரிடம் பிருத்விராஜ் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னணி நடிகர் சம்மதம் தெரிவித்தவுடன், இப்படத்தின் ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.