வேலூர் மாவட்டத்தில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னாள் அமைச்சர் துரைமுருகனை முன்னிலைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் அப்செட் ஆன ஸ்டாலின் தனது பயணத்தை பாதியில் முடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறவேண்டும் நோக்கத்தோடு 234 தொகுதியிலும் வாக்காளர்களை சந்திக்க ‘நமக்கு நாமே விடியல் மீட்பு' பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கி திருச்சி வரையிலும், 2 கட்டமாக நீலகிரியில் தொடங்கி கடலூரில் முடித்தார்.
3ம் கட்ட பயணத்தை சேலத்தில் தொடங்கிய ஸ்டாலின் செவ்வாய்கிழமையன்று வேலூர் மாவட்டத்தில் தன் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். வேலூர் மாவட்டம் 13 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.
செவ்வாய்கிழமையன்று திருப்பத்தூரில் தன் சுற்றுப்பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், அங்கு பஜார் பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
பின்னர், ஜோலார்பேட்டையில் மகளிர் குழுக்களைச் சந்தித்து விட்டு, அங்கிருந்து வாணியம்பாடியில் விவசாயிகள், ஜமாத் தலைவர்கள், தோல் தொழிற்சாலை அதிபர்களை சந்தித்து பேசினார். திட்டக்குழுவில் குழப்பம் ஸ்டாலினை வரவேற்க திமுக மேற்கு மாவட்டம் சார்பில் குறைந்த அளவிலேயே பேனர்கள் வைக்கப்பட்டன.
இதிலும் சிலவற்றை மர்ம நபர்கள் கிழித்துவிட்டனர். இதனால் ஸ்டாலினின் பயணத்தை திட்டமிடும் குழு அதிர்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சிகளிலும் ஏகப்பட்ட குளறுபடி இருந்ததால் ஒரு கட்டத்தில் ஸ்டாலின் டென்சன் ஆனதாக கூறப்படுகிறது.
துரைமுருகன் போஸ்டர் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் காட்பாடி பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்களில் துரைமுருகன் படம் இடம் பெற்றிருந்தது. இதனால் டென்ஷனான ஸ்டாலின் கிரியேட்டிவ் டீம் பலவித மாற்றங்களை அவசரம் அவசரமாக செய்தனராம்.
இதனால் துரைமுருகன் டென்ஷனாகவே காணப்பட்டார். மாணவர்களுடன் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு திருமண மண்டபத்தில் நடைபெற்ற வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது, வெளியேறிய துரைமுருகன், அதன்பின்னர் உள்ளே வரவில்லையாம்.
வாலாஜா, அரக்கோணம் போன்ற பகுதிகளில் ஸ்டாலினின் நிகழ்ச்சி நடைபெற்ற போது, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பாதியில் திரும்பி வந்தது வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்தி கோஷ்டியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்கடமா? சந்தோசமா? அதேநேரத்தில் துரைமுருகன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவர் பாதியில் திரும்பினார் என்றும் வேலூர் மாவட்ட பயணம் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இதில் எது உண்மையோ தெரியலையே. இதேபோன்ற நிகழ்வை சேலத்தில் சந்தித்தார் ஸ்டாலின். இப்போது வேலூரிலும் நமக்கு நாமே பயணம் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.