நாளையும் நாளை மறுநாளும் ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம் !

கனமழை வெள்ளம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை புறப்படும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நாளை மறுநாள் மேலும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் தூரந்தோ ரயில் (எண்.12269)

நாளை காலை 7.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - சந்திரகாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 02842)

நாளை இரவு 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12829) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - ஷார்மினார் எக்ஸ்பிரஸ் (எண்: 22641)

எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் (எண்: 16359 வழி: காட்பாடி, ரேணிகுண்டா) ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் 22-ந் தேதியன்று திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1.15 மணிக்குப் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (எண்: 22620) ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings