நர்சிங் மாணவியைக் முத்தமிட முயன்ற தாத்தா!.

1 minute read
நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த நர்சிங் மாணவியை முதிய வர் ஒருவர் கட்டிப் பிடிதது முத்தம் கொடுக்க முயன்ற சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்பதூர் பகுதியை சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம்). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பயிற்சி மையத்தில் நர்சிங் படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.

இதனால் பெற்றோர் இருவரும் ரமாவை வீட்டில் விட்டு விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். ரமா தனியாக இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

அப்போது திடீரென ரமாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமா அந்த முதியவரை தள்ளிவிட்டு சத்தம் போட்டார்.

அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உறவினர்கள் திரண்டு வருவதை கண்டதும் அந்த முதியவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மாலையில் பெற்றோர் வீடு திரும்பியதும் இது பற்றி ரமா அவர்களிடம் கூறி அழுதார்.

இச்சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய முதியவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings