ஜனாஸாவை அடக்கம் செய்வது எப்படி?

ஜனாஸாவை பொது மைய வாடியில் அடக்கம் செய்வதே சிறப்பானது. வீடுகளில் அடக்கம் செய்வது தடுக்கப்பட்டதாகும். மண்ணறை ஆழமானதாகத் தோண்டப்படல் வேண்டும்.
ஜனாஸாவை அடக்கம் செய்வது எப்படி?
மண்ணறையின் அடிச்சுவர் பகுதியில் கிப்லாவை நோக்கிய வண்ணம் ஜனாஸாவை வைக்கக்கூடிய அளவுக்கு ஒரு குழி தோண்டப்பட வேண்டும்.

(திருமணமானவர் ஆக இருப்பின்) முந்திய இரவில் தாம்பத்திய உறவில் ஈடுபடாதவர் ஜனாஸாவைக் கப்றில் வைப்பது சுன்னத்தாகும்.

ஜனாஸாவை கப்றில் வைக்கும் போது கால் பகுதியால் (முதலில்) இறக்குவதும், கப்றில் வைப்பவர் 'பிஸ்மில்லா வ அலா சுன்னத்தி ரசூலிலில்லாஹ் எனக் கூறுவதும் சுன்னத்தாகும்.
இன்றும் சில ஊர்களில் ஜனாஸாவைக் கப்றில் வைக்கம் போது 'மின்ஹா கலக்னாகும், வ மின்ஹா நுயீதுகும், வ மின்ஹா நுக்ரிஜுகும் தாரதன் உக்ரா எனும் திருமறை வசனத்தை ஓதுகிறார்கள்.

இது ஆதாரமற்ற முற்றிலும் நபி வழிக்கு முறனான செயலாகும். இமாம் ஷவ்கானி அவர்களுக்குறிய நைலுல் அவ்தார் எனும் நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாஸாவின் முகம் கிப்லாவை நோக்கியதாக வைக்கப்பட வேண்டும். ஜனாஸாவை நல்லடக்கம் செய்த பின் அந்த ஜனாஸாவுக்காக பிரார்த்திப்பது நபி வழியாகும். 
ஜனாஸாவை அடக்கம் செய்வது எப்படி?
நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவை அடக்கி முடித்தவுடன் அங்கே நின்று 'உங்களது சகோதரருக்காக மன்னிப்புத் தேடுங்கள்.

அவருக்கு (கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்) மன உறுதியையும் கேளுங்கள். 

அவர் இப்போது கேள்விக் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் என அங்கிருக்கும் தமது தோழர்களிடம் கூறுவார்கள். என்று உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஜனாஸாவை அடக்கிய பிறகு அதன் ஈடேற்றத்திற்காக அல்லாஹ்விடம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்க வேண்டும் எனும் நபி வழியை விட்டு விட்டு இன்று சில இடங்களில் தல்கீன் என்ற பெயரில், 
ஜனாஸாவை விளித்து உம்மிடம் கப்றில் வந்து கேள்வி கேட்கும் மலக்குகளிடம் இவ்வாறு, இவ்வாறெல்லாம் விடை சொல் என்று 

பாடம் நடத்துவது போல் சொல்லிக் கொடுப்பது நபி வழிக்கு மிகவும் முறனானதாகும். சிறிதும் பயனற்றதாகும். இது பற்றி அல் குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.

'(நபியே) நிச்சயமாக மரணித்தோரை செவியுறச் செய்ய உன்னால் முடியாது" (27:80). '(நபியே) சமாதிகளில் உள்ளவர்களைச் செவியுறச் செய்பவராக நீர் இல்லை." ( 36: 22)
ஜனாஸாவை அடக்கம் செய்வது எப்படி?
ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட பிறகு அதை அவசியம் வெளியேற்ற வேண்டும் என்று முக்கியத்துவம் ஏற்பட்டால், 

அவசியம் வெளியேற்றியாக வேண்டும் என்ற நிலை உருவானால் அதை வெளியேற்றுவதில் குற்றமில்லை.

மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள். அந்நேரங்கள் !

1. சூரியன் உதிக்கும் போது.

2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.

3. சூரியன் மறையும் போது.

என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.
கப்றுக்கு மேல் கட்டடம் கட்டுவதோ, அங்கே விழாக்கள் கொண்டாடப்படுவதோ அதைத் தொழுமிடமாக ஆக்கிக் கொள்வதோ தடுக்கப்பட்டதாகும். 

கப்றுகளை உயர்த்திக் கட்டுவதும், அங்கு விழாக்கள் எடுக்கப்படுவதும் நபி வழிக்கு முற்றிலும் முறன் பட்டதாகும்.

ஒரு மனிதர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தவர்கள், அவரோடு நெருக்கமானவர்கள், நண்பர்கள் போன்றோர் அவரது பிரிவால் துயருருவதையோ, 

கண்ணீர் சிந்துவதையோ, சப்தமின்றி அழுவதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை மாறாக அதைப் பாசத்தின் வெளிப்பாடு என்றே இஸ்லாம் கூறுகிறது.
ஜனாஸாவை அடக்கம் செய்வது எப்படி?
ஆனால் சப்தமாக கூக்குரலிட்டு, ஓலமிட்டு, ஒப்பாரி வைத்து அழுது புலம்புவதையே இஸ்லாம் தடை செய்துள்ளது.

மைய்யத் வீட்டில் திரளாக மக்கள் ஒன்று கூடுவது, அங்கு விருந்துபசாரம் நடத்துவது போன்றன தடுக்கப்பட்டதாகும் 'மைய்யத்தை அடக்கிய பிறகு மைய்யத் வீட்டில் கூடுவதையும்,

அங்கு விருந்து சமைப்பதையும் ஒப்பாரி வைத்து ஓலமிடும் குற்றத்தைப் போன்றதாக நாங்கள் கருதுவோம் என்று ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்-பஜலி அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா)
Tags:
Privacy and cookie settings