செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை !

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறந்து விடப்பட்டதால், சென்னை - அடையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை !
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஆதாரமாக இருப்பது புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் ஆகும். 

இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,053 மில்லியன் கன அடி. நேற்று வரை இந்த நான்கு ஏரிகளிலும் 5 ஆயிரம் மில்லியன் கன அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. 

ஒரே இரவில் நான்கு ஏரிகளிலும் நீரின் அளவு 2 ஆயிரம் மில்லியன் கன அடி அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போது நான்கு ஏரிகளிலும் நீரின் அளவு 7 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு அதிகமாக சென்று விட்டது. 

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கியமான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த பரப்பளவு 3800 ஏக்கர். 

இந்த ஏரி சென்னையில் இருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 85 அடி. ஆனால், நீர் 81 கன அடியை நெருங்கிவிட்டது. 

தொடர்ந்து நீர் வரத்து 10 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருப்பதால் ஏரி முழுமையாக நிரம்பும் அபாயம் இருப்பதால் 
ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. 

ஏரியின் ஒரு மதகு திறந்து விடப்பட்டு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. 

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உற்பத்தி ஆகும் அடையாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதனால் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்த அடையாறு என்பது 48 கிமீ தூரத்துக்கு உள்ளது. இதன் வழிநெடுகிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து அதிகம் வந்தால் தண்ணீர் திறந்து விடப்படுவதன் அளவும் கூடும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அதிகாரிகள் நேரில் வந்து அறிவுறுத்தி சென்றனர். போலீஸாரும் இங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். 
முன்னதாக, செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் அடையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் 

பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப் படுகிறார்கள் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings