முதலிரவில் ஆபாச படம் கணவன் எடுத்ததாக மனைவி புகார்

முதலிரவில் தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாக இளம்பெண் ஒருவர் கணவன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார் நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த நிவேதா என்பவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
 
அதில், தனக்கும் களியக்காவிளை அருகே உள்ள மடிச்சலைச் சேர்ந்த சஜூவுக்கும் கடந்த யூன் மாதம் 17ம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தன்று இரவு சஜூவின் வீட்டில் எங்கள் முதலிரவு நடந்தது.

அப்போது சஜூ என்னை ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவரை கண்டித்து விட்டு நான் அறையில் இருந்து வெளியே வந்தேன்.

பின்னர் அவரது தந்தையிடம், ஆபாச வீடியோ எடுத்தது பற்றி கூறிய போது அவர், அவன் அப்படித்தான், இதை வெளியில் சொன்னால் உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என எச்சரித்தார்.

மேலும், சஜூவும் அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே சஜூ மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
பொலிசார் அந்த புகாரின் பேரில் சஜூ, அவரது தந்தை சரசப்பன், தாயார் பேபி, உறவினர் அம்பிகா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings