அதிமுக, திமுக - வை அப்புறப்படுத்தி விஜயகாந்துக்கு வாய்ப்பு: பிரேமலதா !

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளை அப்புறப்படுத்தி, விஜயகாந்துக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில், ‘மக்களுக்காக மக்கள் பணி’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் பல்லடம் அருகே நேற்று நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கீர்த்தி ஜி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் என்.தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: 

திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம் மூலமாக, குடிநீர் வரி ரத்து செய்யப்பட்டது. உடுமலை, பல்லடம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆட்சியாளர்கள் மக்களுக்கு செய்யத் தவறியதை, தேமுதிக சுட்டிக்காட்டும். 

இந்த நான்கரை ஆண்டு ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா ஒன்றும் செய்யவில்லை. நிர்வாகத் திறமையில்லாத அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி நடத்துகிறார். இதேபோல், கடந்த திமுக ஆட்சியிலும் எதுவும் நடக்கவில்லை. 

2016-ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம். அப்போது கல்வி, மருத்துவம் மட்டும் தான் இலவசமாக வழங்கப்படும். தேமுதிக என்ன சொல்கிறது என்பதை, அனைத்துக் கட்சியினரும் கவனிக்கிறார்கள். அடுத்த 6 மாத காலத்தை, நாம் பயன்படுத்த வேண்டும். 

விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் வெற்றி பெற்றது கிடையாது. அவரைப் பற்றி தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தெரியும். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளை அப்புறப்படுத்தி, விஜயகாந்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 



விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் வெற்றி பெற்றது கிடையாது. அவரைப் பற்றி தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தெரியும். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளை அப்புறப்படுத்தி, விஜயகாந்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

இதைத்தொடர்ந்து, ரூ.25 லட்சம் மதிப்பில் திருப்பூர் அரசு சித்த மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கினார். 

அவர் பேசும்போது, “எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சந்திக்கத் தயார். தமிழக மக்களை வறுமையில் வைத்திருக்கும் வரை தான் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் வேலை. 

கடந்த முறை கருணாநிதி ஆட்சியில் இருந்தார்; அவரை எதிர்த்தேன். தற்போது, ஜெயலலிதாவை எதிர்க்கிறேன். அதிமுக கூட்ட ணியில் சேர்ந்ததால், தொண்டர்கள் வருத்தப் படுகிறார்கள்” என்றார். 

கடந்த முறை கருணாநிதி ஆட்சியில் இருந்தார்; அவரை எதிர்த்தேன். தற்போது, ஜெயலலிதாவை எதிர்க்கிறேன். அதிமுக கூட்ட ணியில் சேர்ந்ததால், தொண்டர்கள் வருத்தப் படுகிறார்கள்” என்றார்
Tags:
Privacy and cookie settings