அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர வீதியொன்றிலும் வர்த்தக நிலையங்களிலும் யுவதியொருவர் நிர்வாணமாக நடந்து திரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
25 வயதான கெபி கிரெக்கோ எனும் யுவதியே கடந்த வாரம் இவ்வாறு நிர்வாணமாக நடந்து திரிந்தார். தலையில் பச்சை நிற விக் ஒன்றையும் குதி உயர்ந்த பாதணிகளையும் மாத்திரம் இவர் அணிந்திருந்தார்.
அவுஸ்திரேலிய சஞ்சிகை யொன்றுக்காக கெபி கிரக்கோ இவ்வாறு நிர்வாணமாக நடந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மெல்பேர்னின் வர்த்தகப் பகுதிகளில் ஒன்றிலுள்ள எக்ஸிபிஷன் ஸ்ரீட் எனும் வீதியிலும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் நிர்வாணமாக சென்றார்.
அவ்வீதிவழியே சென்ற சிறார்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கெபி கிரக்கோவின் கோலத்தை கண்டு திகைப்படைந்தனர்.
உணவு விடுதி ஒன்றுக்கு வெளியே பலர் பார்த்துக் கொண்டிருக்க நிர்வாணமாக நடனமும் ஆடினார் கெபி கிரெக்கோ. சிலர் தமது செல்லிடத் தொலைபேசிகள் மூலம் அவரை படம் பிடித்துக் கொண்டனர்.
அவுஸ்திரேலிய தொலைக்காட்சி அலைவரிசை யொன்றிலும் இக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
கெபி கிெரக்கோவின் இந்த நிர்வாண நடை குறித்து தாம் விசாரணை நடத்துவதாக மெல்போர்ன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெபி கிரெக்கோ குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு இரு வருட காலம் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கெபி கிெரக்கோ ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளான மொடல்களில் ஒருவராவார். அவுஸ்திரேலியாவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜெவ்ரி எடல்ஸ்டனின் காதலி இவர்.
தொழிலதிபரான ஜெவ்ரி எடல்ஸ்டனுக்கு 71 வயதாகிறது. தன்னைவிட எடல்ஸ்டன் 46 வயது மூத்தவரான போதிலும் அவரை கெபி கிகெரோக்கோ காதலித்து வருகிறார்.
வீதியொன்றில் வைத்தே, கெபியை திருமணம் செய்து கொள்வதற்கு புரபோசல் செய்தார் எடல்ஸ்டன்.
அதை கெபி ஏற்றுக் கொண்டதையடுத்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் அண்மையில் நடைபெற்றது.
அதன்பின் உடனடியாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது பெயருடன் எடல்ஸ்டனின் பெயரையும் இணைத்து தகவல்களை பரிமாறினார் கெபி.
ஆனால், கெபி கிரெக்கோ நிர்வாணமாக வீதியில் நடந்தமை அவரின் காதலரான எடல்ஸ்டனுக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெபி கிெரக்கொவின் நிர்வாண நடை குறித்து அறிந்த எடல்ஸ்டன், இது சகிக்க முடியாத ஒரு செயற்பாடு என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் தான் வேடிக்கைக்காக இவ்வாறு செய்ததாக கெபி கிகெரக்கோ தெரிவித் துள்ளார்.
அதே வேளை பொலிஸாரை சங்கடத்திற் குள்ளாக்குவதற்காக தான் இவ்வாறு செய்யவில்லை எனவும் கெபி கிரெக்கொ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த செவ்வி யொன்றில், அவுஸ்திரேலிய பொலிஸாரை சங்கடத்திற் குள்ளாக்குவது எனது நோக்கமல்ல.
பொலிஸாரை நான் மிகவும் மதிக்கிறேன். என்னைப் பொறுத்த வரை இது ஒரு பெஷன், இது ஒரு கலை.
ஆனால் நிர்வாணமாக வீதியில் திரிகிறேன் என ஏனையோர் கூறக்கூடும். எனது உடல்குறிதது நான் வெட்கப்பட வில்லை எனக் கூறியுள்ளார்.