தங்கையை கூட்டாக கற்பழிக்க வைத்து கண்களை தோண்டி எடுத்த சகோதரி !

இளம்பெண் ஒருவரின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி அவரை பல நபர்களை விட்டு கற்பழிக்க வைத்து, பின்னர் கண்களை தோண்டி எடுத்த உடன்பிறந்த சகோதரியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அர்ஜெண்டினா நாட்டில் உள்ள ஜெனரல் பினேடோ என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒரு விநோதமான நோய் தாக்கியுள்ளது.

அதாவது, சிறுமியின் கண்களுக்கு மட்டும் சில விலங்குகள் நடமாடுவது போல் தெரிந்ததாகவும், அந்த விலங்குகள் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்ததால், சிறுமியின் உடலில் பேய் தாக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இதனை பெற்றோர்களும் நம்பியுள்ளனர். சிறுமியின் மூத்த சகோதரி ஒருவர் தனது தங்கையின் பிரச்சனை தீர அருகில் உள்ள ஒரு தேவாலய பாதிரியாரின் உதவியை நாடியுள்ளார்.

சிறுமியின் நிலையை அறிந்த பாதிரியார், அவரது உடலில் பேய் புகுந்துள்ளது என்றும், அந்த சிறுமியின் கண்கள் வழியாகவே அந்த பேய் நடப்பவை எல்லாவற்றையும் பார்த்து வருவதாக கூறினார்.

ஒரு நபரின் உடலுக்குள் பேய் புகுந்திருந்தால், அந்த பேயிற்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தினால், அந்த உடலை விட்டு பேய் வெளியேறிவிடும்.

எனவே, சிறுமியின் உடலுக்குள் பேய் செல்வதற்கு அவரது கண்களே காரணமாக இருப்பதால், அவற்றை தோண்டி எடுத்து விடுங்கள் என அறிவுரை கூறி தேவாலயத்திற்கு சொந்தமான ஒரு கூர்மையான கத்தியையும் அந்த பாதிரியார் கொடுத்து அனுப்பியுள்ளார்.

வீட்டிற்கு திரும்பி வந்த மூத்த சகோதரி தனக்கு தெரிந்த இளைஞர்கள் சிலரை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். பின்னர், தனது சொந்த சகோதரியை கற்பழிக்குமாறு இளைஞர்களை ஏவி விட்டுள்ளார்.

மூத்த சகோதரியின் வார்த்தையை கேட்டு அத்தனை வாலிபர்களும் அந்த 16 வயது சிறுமியை துடிதுடிக்க கற்பழித்துள்ளனர். பின்னர், அனைவரும் இளைய சகோதரியை பிடித்துக் கொள்ள, அவர் மீது அமர்ந்து அவரது இரண்டு கண்களையும் தோண்டி வெளியே எடுத்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தின் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த அந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர், தனது தங்கையை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் வெளியே கசிய, அதிர்ச்சி அடைந்த பொலிசார் மூத்த சகோதரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பேசிய Pablo Almiron பொலிசார், தனது 22 வருட பொலிஸ் வாழ்க்கையில் இதுபோன்று ஒரு கொடூரமான சம்பவத்தை சந்திக்கவில்லை என்றார். மூடநம்பிக்கையின் உச்சமான இந்த சம்பத்தில் பங்கேற்றுள்ள அத்தனை நபர்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும்.

 இருப்பினும், பல நபர்களால் கற்பழிக்கப்பட்டு தற்போது கண்களை இழந்து தனது வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்க இருக்கும் அந்த சிறுமியின் நிலை தான் பரிதாபமாக இருப்பதாக அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings