ஆனந்த் ஷங்கர் - விக்ரம் பட தலைப்புக்கு 'மாரீசன்' பரிசீலனை !

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்துக்கு 'மாரீசன்' என்பது தலைப்பாக இறுதி செய்யப்படும் என தெரிகிறது. 
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இசையமைப்பாளராக பணியாற்ற ஹாரிஸ் ஜெயராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணியாற்ற இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பாக 'மாரீசன்' என்பது தான் முதன்மையாக இருக்கிறது. 'மர்ம மனிதன்' என்ற தலைப்பும் பரிசீலனையில் இருந்தாலும், 'மாரீசன்' என்பதே படத்தின் கதைகளத்துக்கு சரியாக அமையும் என்கிறது படக்குழு. 

'மாரீசன்' என்பது இராமாயணத்தில் இடம்பெற்ற ஒரு மாய மான். அந்த மானை வைத்து லட்சுமணனை திசை திருப்பிவிட்டு சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போவார். 

விக்ரமுக்கு இப்படத்தில் இரண்டு கெட்டப்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு கெட்டப் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்பதால் தான் 'மாரீசன்' என்ற தலைப்பு பொறுத்தமாக இருக்கும் என்று கருதுகிறது படக்குழு. 

மேலும், 'புலி' தலைப்புக்கு முன்பாக 'மாரீசன்' என்ற தலைப்பைத் தான் பதிவு செய்து வைத்திருந்தார் ஷிபு தமீன்ஸ். தற்போது விஜய் படத்துக்கு பதிவு செய்த தலைப்பை, விக்ரம் படத்துக்கு உபயோகிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings