தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 15வதுவார்டுக்கு உட்பட்ட கொண்டிமகன் தெருவை சேர்ந்தவர் தர்வேஷ்(31). இவரது வீட்டில் உள்ள குடிநீர் இணைப்பில் கடந்த 10நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் நகராட்சி அதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிட்டார்.
அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் பக்கத்து வீட்டு குடிநீர் இணைப்பில் வழக்கம்போல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் சீராக இருந்தது.
இதனால் தனது குடிநீர்குழாயை தானே சரிசெய்வது என்று தர்ேவஷ் முடிவெடுத்தார். இதன்படி கடந்த மாதம் 26ம் தேதி குடிநீர் குழாயில் ஒரு குச்சியை விட்டு அடைப்பை எடுக்க முயன்றார்.
அப்போது செத்த நிலையில் பாம்பு ஒன்று குழாயில் இருந்து வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தர்வேஷ் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அதனை பொய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனது பேஸ்புக் இணையதளத்தில் குழாயில் வந்த செத்த பாம்பு குறித்த தகவலை தர்வேஷ் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இதனால் கம்பம் நகரமே பரபரப்பானது. நகராட்சி அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து தர்வேஷ் வீட்டிற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கடந்த மாதம் 30ம்தேதி குடிநீர்குழாயை நேரில் சென்று ஆய்வு நடத்திய நகராட்சி அதிகாரிகள் குழாயை கோபத்துடன் அடைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட தர்வேஷ் கூறுகையில், நான் அவதூறாக நகராட்சி நிர்வாகத்தை குறை சொல்லவில்லை. எனது வீட்டின் குடிநீர் குழாயை அடைத்து கிடந்ததற்கு செத்த பாம்பு தான் காரணம்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது என்னை மிரட்டி விட்டு குழாய் இணைப்பையும் அடைத்துச் சென்றனர். கம்பம் நகர மக்களுக்கு பாதுகாப்பில்லாத குடிநீரே விநியோகம் செய்யப்படுகிறது என்றார்.
நகராட்சிஆணையாளர் (பொறுப்பு) அய்யனாரிடம் கேட்டபோது, குடிநீர் குழாயில் பாம்பு வந்ததாக பேஸ்புக்கில் பரவிய தகவலை அடுத்து சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கே சென்றோம்.
இதன் உண்மைநிலை தெரிய வரும்வரை அவரது இணைப்பு தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது என்றார்.