பெங்களூருவில் ஓடும் பேருந்தில் நர்சிங் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சுளிபெல்லே ஹோஸ்கோடே அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "பெங்களூருவுக்கு அருகே இருக்கும் கிராமம் சுளிபெல்லே ஹோஸ்கோடே. அப்பகுதியிலிருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்த 19 வயது இளம் பெண்ணை பேருந்து ஓட்டுநரும், கிளீனரும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், நாகனகொண்டனஹல்லி அருகே ஒரு புதரில் அந்த மாணவியை வீசிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட ரவி மற்றும் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டனர்" என்றனர்.