சாதனை படைத்த காந்த மனிதன் !

ஜார்ஜி யாவை சேர்ந்த காந்த சக்தி மனிதன் புதிய சாதனை நிகழ்த்தி யுள்ளார். ஜார்ஜியா வின் டிபிலிசி நகரில் வசிப்பவர் எலிபெர் எல்ஷியேவ் (வயது 42).
குத்துச் சண்டை பயிற்சி யாளரான எலிபெர், அபார காந்த சக்தியுடன் வாழ்ந்து கொண்டிரு க்கிறார். அதாவது, இரும்பு பொருட்கள் இவரது உடலில் ஒட்டிக் கொள்கிறது.

கடந்த 2011–ம் ஆண்டில் பொதுமக்கள் மத்தியில் தனது உடலில் 50 கரண்டி களை (ஸ்பூன்) ஒட்ட வைத்து சாதனை நிகழ் த்தினார். சில நாட்களுக்கு முன்பு அவரே இந்த சாதனையை முறியடித் துள்ளார்.

தற்போது தனது மார்பு, முதுகு பகுதியில் 53 கரண்டி களை ஒட்ட வைத்து பார்வையா ளர்களை அசத்தினார்.

இது பற்றி எலிபெர், காந்த சக்தி இயற்கை யாகவே தனது உடலில் அமைந்து விட்ட தாகவும், எதிர் காலத்தில் வாய்ப்பு கிடை த்தால் குட்டி விமானம், காலி ரெயில் பெட்டி ஆகிய வற்றை இழுத்து சாதனை படைக்க ஆசைப் படுவதாக வும் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings