நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'காதலும் கடந்து போகும்' திரைப்படம், பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
'சூது கவ்வும்' கூட்டணியான நலன் குமாரசாமி - விஜய் சேதுபதி - சி.வி.குமார் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண தீர்மானித்தார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வந்தது.
கொரியன் படம் ஒன்றின் உரிமையை அதிகாரப்பூர்வமாக வாங்கி இங்கு ரீமேக் செய்து வருகிறார்கள். விஜய் சேதுபதி உடன் 'ப்ரேமம்' படத்தில் நடித்த மடோனா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
'காதலும் கடந்து போகும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். சமுத்திரக்கனி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்