கலையரசன் மற்றும் சூரி இருவரும் இணைந்து 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
'தெய்வ வாக்கு', 'ராசய்யா', 'மரியாதை', 'சரோஜா', 'அரவான்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் அம்மா கிரியேஷன்ஸ். இந்நிறுவனத்தினர் 2015-ல் தங்களது 25வது ஆண்டை கொண்டாடி வருகிறார்கள்.
25வது ஆண்டை முன்னிட்டு 2MB மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. அப்படத்துக்கு 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்க கலையரசனும், சுருளிராஜனாக நடிக்க சூரியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இம்மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். நாயகி மற்றும் இசையமைப்பாளர் ஆகியோர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஓடம் இளவரசு இப்படத்தை இயக்க இருக்கிறார்.
காதல் மற்றும் காமெடி கலந்து உருவாகும் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.