மிஸ்டு காலால் வந்த வினை- பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியர் !

நெல்லையில் மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.


இவரது தந்தையின் செல்போனுக்கு சில மாதங்களுக்கு முன்பு மிஸ்டு கால் வந்தது. இதை மாணவி எடுத்து பேசிய போது எதிர்முனையில் வேலூர் மாவட்டம் நெல்லிகுளத்தை சேர்ந்த வீரச்சாமி மகன் திருநாவுக்கரசு என்பவர் பேசியுள்ளார்.

இதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி இருவரும் பேசி வந்தனர். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்தனர். அப்போது தனிமையில் நெருக்கமாக இருந்தனர். இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாக மாணவிக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் நெல்லிகுளம் சென்று காதலனிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் வருவதாக கூறிய அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மாணவி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அவரது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வள்ளியூர் அனைத்து பெண்கள் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று மாணவி, திருநாவுக்கரசு மீது புகார் கொடுத்தார். தன்னை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அதில் கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசை தேடி வருகின்றனர். இவருக்கு தற்போதுதான் வேலூரில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings