பேஸ்புக், டிவிட்டர் என சமூகவலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பல வேடிக்கையான புகைப்படங்கள் பகிரப்படுவதுண்டு. அப்படி இன்று நான் பார்த்த புகைப்படம் ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த நாகரிக உலகில் எதுவெல்லாம் நாகரீகமாக மாறிக்கொண்டு இருக்கிறது பாருங்கள்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை.
திருமண விழா ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது இந்தப் புகைப்படம். நிச்சயமாக இப்படி ஒரு கேக்கை பெண் வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ ஆர்டர் செய்திருக்க மாட்டார்கள்.
இது சுற்றி நிற்கும் நண்பர்களின் குறும்பாகத் தான் இருக்க வேண்டும். கழிப்பறை கோப்பை போன்ற ஒரு கேக், அதில் மஞ்சள் நிறத்தில் மலம் போன்று வேறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கேக்கை கட் பண்ணி, மாப்பிள்ளைக்கு மணமகள் ஊட்டினாலும் சரி, மணமகள் மாப்பிள்ளைக்கு ஊட்டியிருந்தாலும் சரி அல்லது சுற்றி இருந்தவர்கள் சாப்பிட்டிருந்தாலும் சரி, எப்படி பீல் பண்ணியிருப்பார்கள் என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. என்னவொரு வில்லத்தனமான கேக்.
அப்படி என்ன நண்பர்களை இந்த மணமக்கள் வெறுப்பேற்றினார்களோ... இப்படி பழி வாங்கி விட்டார்கள். ஆனால் அதே சமயம் இந்த போட்டோவை கொஞ்சம் (உற்றுப் பார்த்தால்) போட்டோஷாப் வேலை போலவும் தெரிகிறது.
இந்த நாகரிக உலகில் எதுவெல்லாம் நாகரீகமாக மாறிக்கொண்டு இருக்கிறது பாருங்கள்.