பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற உலக சாக்லேட் சாம்பியன் பட்டத்தை 10 நாடுகளை பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் வென்றுள்ளது.
பிரான்சில் Cacao Barry எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட 21-வது சாக்லேட் திருவிழாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன.
கடந்த 2005-ம் ஆண்டில் இருந்தே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழாவனது நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு நடைபெற்ற் விழாவில் ஒட்டு மொத்த உலக நாடுகளில் இருந்து பிரபலமான 19 சாகெலேட் கலைஞர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
பல்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த விழாவில் பிரான்சின் Vincent Valley தமது சிறப்பு படைப்பான Inspiration from nature எனும் சாக்லேட் வடிவமைப்பிற்காக பெற்றுள்ளார்.
இளம் பெண்ணின் உருவத்துடன் அழகான வடிவமைப்பு காண்பவரை கவரும் விதம் அமைந்திருந்ததாக Cacao Berry நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2005-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் இப்போட்டியில் பிரான்ஸ் நாட்டவர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்