உணர்வுகளுடன் கூடிய பிளாஸ்டிக் தோல்: விஞ்ஞானிகள் தயாரித்தனர் !

மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பொருத்தப் படுகின்றன. ஆனால் அதற்கும், உடலுக்கும் இடையே உணர்வுகள் இருக்காது.



தற்போது உணர்வுக ளுடன் கூடிய செயற்கையான பிளாஸ்டிக் தோல் தயாரிக்கப் பட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் கலிபோர்னியா வில் உள்ள ஸ்டேன் போர்டு பல்கலைக் கழகத்தின்

பேராசிரியர் ஷெனான் பவோ தலைமை யிலான விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர். இந்த தோல் 2 அடுக்குகளை கொண்டது.

இதன் மேல் அடுக்கு தொடு உணர்ச்சி தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு அடுத்த அடுக்கு எலெக்ட்ரிக்கல் சிக்னல்களை பயோகெமிக்கல் முறையில் நரம்பு செல்களுக்கு வழங்குகிறது.

இதனால் இந்த செயற்கை பிளாஸ்டிக் தோல் மனிதர்களின் தோல் போன்று செயல்படக் கூடியது என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தவகை செயற்கை பிளாஸ்டிக் தோல் உருவாக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளது
Tags:
Privacy and cookie settings