தான் குளிப்பதை தானே படம்பிடிக்கும் த்ரிஷா!

1 minute read
தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில், அவரைதான் த்ரிஷா திருமணம் செய்து கொண்டு செட்டிலாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தான் குளிப்பதை தானே படம்பிடிக்கும் த்ரிஷா!!?
ஆனால், எதிர்பாராதவிதமாக தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், குடும்பத்தாரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திரிஷா-வருண்மணியன் திருமணம் நின்றுபோனது. 

அதையடுத்து நல்லவேளை திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்படாமல் அதற்கு முன்பே ஏற்பட்டதே என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார் த்ரிஷா.

மேலும், சினிமாவில் மீண்டும் புதிய உற்சாகத்துடன் களமிறங்கிய த்ரிஷா கமலுடன் தூங்காவனம் படத்தில் நடித்திருப்பதோடு, போகி, அரண்மனை-2, நாயகி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் அரண்மனை-2, நாயகி படங்களில் பேயாக நடித்து வருகிறார். இதுவரை ஒரே மாதிரியாக மரத்தை சுற்றியே டூயட் பாடி வந்த எனக்கு இந்த பேய் படங்களில் நடிப்பது புதிய அனுபவமாக உள்ளது என்று அதிக ஈடுபாட்டுடன் இந்த படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

அதோடு, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது தோழிகளுடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் நீந்துவதை இப்போது இன்னும் அதிகப்படுத்தியுள்ளார் த்ரிஷா. சென்னையிலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் வாரம் ஒருமுறை நீந்திக்குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த த்ரிஷா, இப்போது வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வரை நீச்சல் குளத்திற்கு செல்கிறாராம்.

தன்னுடன் குளிப்பவர்கள் அதிகபட்சமாக அரை மணி நேரத்தில் வெளியேறினபோதும் த்ரிஷா மட்டும் இரண்டு மணி நேரமாவது தண்ணீருக்குள் ஹாயாக நீந்திக் குளிக்கிறாராம். இப்படி தான் நீந்துவதை தனது தோழிகள் கேமராவில் பதிவு செய்ய, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings