ஓடிசாவில் பெண்ணுடன் சேர்ந்து குடித்து கும்மாளமிட்ட சாமியாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஒடிசா மாநிலம் கெண்டரபாரா பகுதியை சேர்ந்தவர் சாமியார் சாரதி பாபா.
இந்நிலையில் உள்ளூரை சேர்ந்த செய்தி தொலைக்காட்சி ஒன்று சாமியார் சாரதி பாபா மருத்துவம் படிக்கும் ஒரு பெண்ணுடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாக செய்தி வெளியிட்டது.
மேலும் சாமியார் விஸ்கி வகை மது அருந்தியதாகவும் தந்துரி சிக்கன் சாப்பிட்டதாகவும் செய்தி வெளியிட்டது.
இதனுடன் அந்த தொலைகாட்சி சாமியார் ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டுடன் கூலிங் கிளாஸ் அணிந்து ஐதராபாத் ஓட்டலில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் காட்டியது.
இதனால் உள்ளூர் மக்கள் சாமியாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
உள்ளூரை சேர்ந்த சில அமைப்பினர் சாமியாருக்கு எதிராக அவரது வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் பரவுவதை தொடர்ந்து மாநில அரசு சாமியார் மீது குற்றவியல் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. குற்றப்பிரிவு போலீசார் சாமியாரின் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பும் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.
எனினும் தனது எதிரான குற்றசாட்டுகளை மறுத்து உள்ள சாமியார், தன்னை அவமானபடுத்த சதி நடப்பதாக கூறி உள்ளார்.
இந்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது