வாகனத்துக்கான நோ கிளைம் போனஸ் !

நோ கிளைம் போனஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குக் கூடிய வரையில் நஷ்டம் வராமல் அதாவது, இழப்பீடு கோரும் சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நோ கிளைம் போனஸ்
அது நமக்கும் நல்லது; இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நல்லது. ஓராண்டில் இழப்பீடு எதுவும் பெறவில்லை என்றால் ‘நோ கிளைம் போனஸ்’ என்ற சலுகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கின்றன. 
ஓராண்டு இழப்பீடு எதுவும் இல்லாமல் பாலிஸி காலாவதியாகும் தேதிக்கு முன் புதுப்பித்தால், அடுத்த ஆண்டுக்கான பிரீமியத்தில் தள்ளுபடி கொடுக்கிறார்கள். சில நிறுவனங்கள் அதே பிரீமியத்துக்குக் கூடுதல் கவரேஜ் தருகின்றன. 


அதே நேரத்தில், இழப்பீடு கோரப்பட்டிருந்தால், அடுத்து வரும் ஆண்டில் பிரீமியம் அதிகமாகும். இதை ‘மாலஸ்’ (Malus) என்பார்கள். இந்த அதிகரிப்பு 10 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் வரை இருக்கும். 

இந்த பிரீமியத் தள்ளுபடி ஓன் டேமேஜ் பாலிஸியின் பிரீமியத்துக்கு மட்டுமே கிடைக்கும். மேலும், தொடர்ந்து ‘கிளைம்’ செய்யவில்லை என்றால் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி சதவிகிதம் அதிகரிக்கும்.

இடையில், கிளைம் செய்த பிறகு பாலிஸியைப் புதுப்பித்தால், போனஸ் சதவிகிதத்தைக் குறைத்து விடுவார்கள். இழப்பீடு தொகை ‘நோ கிளைம் போனஸ்’ தொகையைவிட குறைவாக இருந்தால், இழப்பீடு கேட்காமல் இருப்பது நமக்கு லாபம். உங்களுடைய பாலிஸி காலாவதி ஆகி விட்டது, 
கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை?
அதே நேரத்தில் நோ கிளைம் போனஸ் இருக்கிறது என்றால், பாலிஸி காலாவதி யானதிலிருந்து 90 நாட்களு க்குள் புதுப்பித்தால், நோ கிளைம் போனஸ் பிரீமியத் தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ளலாம். 

புதிய வாகனம் வாங்குவதாக இருந்தால், பழைய வாகனத்தின் (விற்பனை செய்யும் பட்சத்தில்) நோ கிளைம் போனஸை புதிய காரின் பாலிஸிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இதற்கு வாகனத்தை விற்கும் முன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு முன்கூட்டியே நோ கிளைம் போனஸ் இருப்பதைத் தெரிவிக்க வேண்டும். 


 பிரீமியத் தள்ளுபடி
நோ கிளைம் போனஸ் எவ்வளவு? 

ஒரு வாகனத்தை விற்று விட்டு, புதிய வாகனம் வாங்கும் போது ‘நோ கிளைம் போனஸை’ பயன்படுத்திக் கொள்ள முடியும். பாலிஸி காலாவதி ஆவதற்கு முன் இப்படி புதுப்பிப்பது அவசியம்.
Tags:
Privacy and cookie settings