சசிபெருமாள் இல்லத்தில் மின் இணைப்பு துண்டிப்பு? மின்சார சபை ஊழியர்கள் நடவடிக்கை!

சசிபெருமாளின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பை முழுமையாக துண்டிக்க மின் அலுவலர்கள் திட்டமிட்டிருப்பதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
சசிபெருமாளின் உடல் அவரது நிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.

இதுவரை சசிபெருமாளின் இல்லத்திற்கு மின் விநியோகம் வழங்கப்பட வில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் மின் ஊழியர்கள் சிலர் சசிபெருமாளின் இல்லத்திற்கு சென்று எழுத படிக்க தெரியாத அவரது மனைவி மகிழத்திடம் கடிதம் ஒன்றில் வலுக்கட்டாயமாக கையொப்பம் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

அந்த கடிதத்தில் வீடு பராமரிப்பு காரணமாக மின் இணைப்பை துண்டித்து விடுமாறும் மின் வாரிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த சசிபெருமாளின் உறவினர்கள், மின் ஊழியர்களை சிறைபிடித்து தட்டிக்கேட்டதால், அவர்கள் அந்தக் கடிதத்தை கிழித்தெறிந்து விட்டுச் சென்றனர்.
Tags:
Privacy and cookie settings