தி.மு.க.வை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை தாம் ஒருபோதும் சொல்லவே முடியாது; எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மட்டுமே அது என்ன என்பது குறித்து தெரியும் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளாரான நடிகை குஷ்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இவை அல்லாமல் கருணாநிதி அணி என ஒன்றும் சீனியர்களை உள்ளடக்கியதாக இருந்தது. குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்த போதிருந்தே கருணாநிதி அணியின் பிரமுகராகவே பேசப்பட்டார்.
பின்னர் தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்ட போது அக்கட்சியில் சலசலப்புகள் 'லைட்டாக' அழகிரி அணியில் இருந்து வெளிப்பட்டது. ஆனால் நடிகை குஷ்புவோ பகிரங்கமாகவே ஸ்டாலினை எதிர்த்து பேட்டி அளித்தார்.
இதனால் கொந்தளித்துப் போன ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்பு மீது திருச்சியில் தாக்குதல் நடத்தினர். சென்னையில் உள்ள குஷ்பு வீடும் தாக்கப்பட்டது.
இதன் பின்னர் தி.மு.க.வில் அவரின் செயல்பாடுகள் குறைந்தன... பின்னர் திடீரென குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகுவதாக கருணாநிதியிடம் ராஜினாமா கொடுத்தார்.
குஷ்பு தி.மு.க.வை விட்டு ஏன் விலகினார் என்ற விவகாரம் ஊடகங்களால் பல முறை யூகங்களாக எழுதப்பட்ட போதும், இதுதான் காரணம் என திட்டவட்டமாக திமுக தரப்பும் குஷ்பு தரப்பும் வெளிப்படுத்தவில்லை.
அதன் பின்னர் குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸில் ஐக்கியமானார். அக்கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் தி.மு.க.வில் இருந்து அவர் விலகியதற்கான 'காரண'த்தை பல முறை செய்தியாளர்கள் கேட்ட போதும் தொடர்ந்து குஷ்பு அதை வெளிப்படுத்த மறுத்து வருகிறார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்த குஷ்புவிடம் இது தொடர்பாக மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் குஷ்பு தாம் தி.மு.க.வில் இருந்து வெளியேறதற்கு காரணம் இருக்கிறது;
எப்படி நீங்கள் கேட்டாலும் நிச்சயம் என் நான் அதை தெரிவிக்கமாட்டேன் என்று மீண்டும் மீண்டும் குஷ்பு திட்டவட்டமாக பதிலளித்திருந்தார்.
அவங்க யோசனை பிரகாரம் யோசிக்கிறதுக்கும் என்ன நினைக்கிறாங்களோ அதை பேசறதுக்கும் சுதந்திரம் இருக்குது; அதை நான் எல்லாருக்கும் தெரியப்படுத்தனும்னு அவசியம் இல்லைன்னு எனக்கு தோணுது..
இதற்கெல்லாம் நான் தீனி போட விரும்பலை.. இங்க இல்லைன்னு சொன்னாக்கா அப்ப அங்க இருந்ததா?ன்னு வரும்.. எதுக்கு தேவையில்லாத விஷயங்களுக்கு தீனி போட்டு வளர்க்கனும்னு அவசியமே இல்லை..
பிரச்சனைகள் இருந்ததுன்னு நான் சொல்லலை.. மர்மம் இருக்குன்னும் நான் சொல்லலை... ஆனால் காரணங்கள் கண்டிப்பாக இருந்தது.. அதை நான் சொல்ல விரும்பவில்லை.
இருந்தாலும் என்ன காரணங்கிறதை அவங்களே முடிவு பண்ணிக்கலாம். திமுகவில் இருந்து நான் ஏன் வெளியேறினேங்கிற காரணம் என்கிட்ட இருந்து உங்களுக்கு கிடைக்கப் போறது இல்லை.. நான் ஏன் வெளியேறினேன்னு எனக்கு தெரியும் தலைவருக்கும் (கருணாநிதிக்கு) தெரியும்.. அதை மீறி 3வது மனுசனுக்கு தெரியனும்னு அவசியமே கிடையாது அப்படி என்னதான் ரகசியமா இருக்கும்?
நடிகை குஷ்பு திடீரென தி.மு.க.வில் சேர்ந்தார். அப்போது அக்கட்சியில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி அணிகள் என பல கோஷ்டிகள் இருந்தன.
இவை அல்லாமல் கருணாநிதி அணி என ஒன்றும் சீனியர்களை உள்ளடக்கியதாக இருந்தது. குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்த போதிருந்தே கருணாநிதி அணியின் பிரமுகராகவே பேசப்பட்டார்.
பின்னர் தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்ட போது அக்கட்சியில் சலசலப்புகள் 'லைட்டாக' அழகிரி அணியில் இருந்து வெளிப்பட்டது. ஆனால் நடிகை குஷ்புவோ பகிரங்கமாகவே ஸ்டாலினை எதிர்த்து பேட்டி அளித்தார்.
குஷ்பு மீது தாக்குதல்
இதனால் கொந்தளித்துப் போன ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்பு மீது திருச்சியில் தாக்குதல் நடத்தினர். சென்னையில் உள்ள குஷ்பு வீடும் தாக்கப்பட்டது.
இதன் பின்னர் தி.மு.க.வில் அவரின் செயல்பாடுகள் குறைந்தன... பின்னர் திடீரென குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகுவதாக கருணாநிதியிடம் ராஜினாமா கொடுத்தார்.
திடீரென விலகிய மர்மம்
குஷ்பு தி.மு.க.வை விட்டு ஏன் விலகினார் என்ற விவகாரம் ஊடகங்களால் பல முறை யூகங்களாக எழுதப்பட்ட போதும், இதுதான் காரணம் என திட்டவட்டமாக திமுக தரப்பும் குஷ்பு தரப்பும் வெளிப்படுத்தவில்லை.
காங்கிரசில் உயர் பதவி
அதன் பின்னர் குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸில் ஐக்கியமானார். அக்கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
திமுகவை விட்டு விலகிய மர்மம்
இருப்பினும் தி.மு.க.வில் இருந்து அவர் விலகியதற்கான 'காரண'த்தை பல முறை செய்தியாளர்கள் கேட்ட போதும் தொடர்ந்து குஷ்பு அதை வெளிப்படுத்த மறுத்து வருகிறார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்த குஷ்புவிடம் இது தொடர்பாக மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் குஷ்பு தாம் தி.மு.க.வில் இருந்து வெளியேறதற்கு காரணம் இருக்கிறது;
அதை நான் வெளிப்படுத்த மாட்டேன்; எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் தெரிந்த அந்த விஷயத்தை 3வது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன்;
எப்படி நீங்கள் கேட்டாலும் நிச்சயம் என் நான் அதை தெரிவிக்கமாட்டேன் என்று மீண்டும் மீண்டும் குஷ்பு திட்டவட்டமாக பதிலளித்திருந்தார்.
தீனி போட விரும்பவில்லை.. தலைவருக்கு தெரியும்.... இது தொடர்பாக புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் குஷ்பு கூறியதாவது: எல்லாருக்கும் சுதந்திரம் இருக்குது;
அவங்க யோசனை பிரகாரம் யோசிக்கிறதுக்கும் என்ன நினைக்கிறாங்களோ அதை பேசறதுக்கும் சுதந்திரம் இருக்குது; அதை நான் எல்லாருக்கும் தெரியப்படுத்தனும்னு அவசியம் இல்லைன்னு எனக்கு தோணுது..
எனக்கும் தலைவருக்கும் பிராப்ளம் இருந்ததா? எனக்கும் தளபதிக்கும் பிராப்ளம் இருந்ததா? எனக்கும் கனிக்கும் பிராப்ளம் இருந்ததா? எனக்கும் வேற யாருக்கும் பிராப்ளம் இருந்ததா?ன்னு நிறைய வந்துகிட்டே இருக்கு..
இதற்கெல்லாம் நான் தீனி போட விரும்பலை.. இங்க இல்லைன்னு சொன்னாக்கா அப்ப அங்க இருந்ததா?ன்னு வரும்.. எதுக்கு தேவையில்லாத விஷயங்களுக்கு தீனி போட்டு வளர்க்கனும்னு அவசியமே இல்லை..
பிரச்சனைகள் இருந்ததுன்னு நான் சொல்லலை.. மர்மம் இருக்குன்னும் நான் சொல்லலை... ஆனால் காரணங்கள் கண்டிப்பாக இருந்தது.. அதை நான் சொல்ல விரும்பவில்லை.
இருந்தாலும் என்ன காரணங்கிறதை அவங்களே முடிவு பண்ணிக்கலாம். திமுகவில் இருந்து நான் ஏன் வெளியேறினேங்கிற காரணம் என்கிட்ட இருந்து உங்களுக்கு கிடைக்கப் போறது இல்லை..