இந்நிலையில் இது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷ்மி, ராகுல், அக்பர் கடந்த ஓராண்டு காலமாக பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
பெங்களூரில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த லினீஷ் மேத்யூ என்ற பெண் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், சிறுமிகளை கடத்தி கேரளாவுக்கு ரஷ்மி, ராகுலிடம் அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்த பெண்கள், சிறுமிகளை ரஷ்மி, ராகுல் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்துள்ளனர்.
பெண்களை வாடிக்கையாளர்களிடம் அழைத்துச் செல்வது ராகுலின் வேலை. வாடிக்கையாளர்களிடம் கறாராக விலை பேசுவது ரஷ்மியின் வேலை. தற்போது லினீஷும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.