ஹார்டு டிரைவ் ரகசியம் !

இணைய வீடியோக்கள் என்றதும் பொழுதுபோக்கு வீடியோக்களும், பூனை வீடியோக்களும் தான் என்று நினைத்து விடக்கூடாது. 
 ஹார்டு டிரைவ் ரகசியம் !
கல்வி சார்ந்த அருமையான வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. கல்வி சார்ந்த வீடியோ சேனல்களும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. 

இவற்றில் ‘டெட்' (TED) அமைப்பின் வீடியோக்களைப் பார்த்தே ஆக வேண்டிய பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

பல்வேறு தலைப்புகளில் அறிவியல், தொழில்நுட்பம் எனப் பல துறை சார்ந்த விளக்க வீடியோக்கள் ‘டெட்' கல்வி சேனலில் இடம்பெற்றுள்ளன.

அண்மை உதாரணம், ‘ஹார்ட் டிரைவ்' செயல்பாட்டை விளக்கும் வீடியோ. ஹார்ட் டிரைவ் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் அதற்குள் என்ன இருக்கிறது? அது எப்படி இயங்குகிறது என்று தெரியுமா?
உள்ளூர் நூலகத்தைவிட அதிகத் தகவல்களைச் சிறிய இடத்தில் சேமித்து வைத்திருக்கும் ஹார்ட் டிரைவ் செயல்பாட்டை அறிந்துகொள்ள வாருங்கள் என அழைக்கிறது.
Tags:
Privacy and cookie settings