புகுந்த வீட்டில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டதை அடுத்து, 20 மாதங்களாக கணவரை பிரிந் திருந்த மனைவி, நேற்று முன் தினம் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கும், ஹோஷங்கபாத் மாவட்டத்தின் இடராஸி கிராமத்தை சேர்ந்த சீமா என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. பல்வேறு கனவுகளுடன், புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த சீமாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.
அந்த வீட்டில் கழிவறை இல்லாதது கண்டு மிகுந்த மனம் உடைந்தார். இது தொடர்பாக, தன் கணவரிடம், சீமா பல முறையிட் டும் எந்த பலனும் இல்லை. 2 ஆண்டு களாக, அவரது ஆசையை நிறை வேற்றும் வகையில், கழிவறையை கட்டி முடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் மனம் உடைந்த சீமா, கடந்த 2014-ம் ஆண்டு, ஜனவரியில், புகுந்த வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டுக்கு சென்றார். மேலும், கழிவறை கட்டி முடிக்கும் வரை, திரும்ப மாட்டேன் என்றும் கணவரிடம் உறுதியாக தெரிவித்தார்.
கழிவறையின் அவசியத்தை வலியுறுத்தி, புகுந்த வீட்டில் இருந்து வெளியேறிய சீமாவின் துணிச்சலை பாராட்டி ஊடகங் களில் செய்திகள் வெளியானதால், இந்த விவகாரம், அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சீமாவின் கணவர் கழிவறை கட்டுவதற்கு, ஷாபூர் கிராம பஞ்சாயத்து தலைவி மங்கிதா பாய் உதவி புரிந்தார். இதன் காரணமாக, சமீபத் தில், மோகன் வீட்டில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது அந்த கழிவறையை திறந்து வைப்பதற்காக, தன், 19 மாத குழந்தையுடன் சீமா நேற்று முன் தினம் தன் புகுந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இதனால், அவரது கணவன் மோகனும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
இதற்கிடையில், சீமாவின் துணிச்சலான நடவடிக்கைக்கு பீடல் மாவட்ட ஆட்சியர் ஞானேஸ் வர் பாட்டீல் பாராட்டு தெரிவித்துள் ளார். சுகாதாரம் மற்றும் துாய்மை விவகாரத்தில், சீமா எடுத்துக்காட் டாக திகழ்வதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.