அன்புமணி ராமதாஸ் வீட்டில் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை !

சென்னையில் பா.ம.க. இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வீட்டில் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை தியாகராயர் நகரில் அன்புமணி ரமாதாஸ் வசித்து வருகிறார். அவரது வீட்டில் மாலினி என்ற 19 வயது இளம் பணிப்பெண் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவர் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள்.

இந்தப் பெண் ஏன் தூக்கிலிட்டு தற்கொலை செய்தார்? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings