வீடொன்றில் திருடுவதற்காக புகுந்த வேளையில், அவ்வீட்டின் படுக்கை அறையில் நிர்வாணமாக உறங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஓரிகன் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் நகரைச் சேர்ந்த ரிச்சர்ட் டீன் டெபியூடிஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான டெபியூடிஸ், போர்ட்லேண்ட் நகரிலுள்ள வீடொன்றின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகளை கொள்ளை யடித்துள்ளான்.
பல இடங்களில் அலைந்து திரிந்ததில் அவன் களைப்பாக இருந்தான்.
எனவே, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்து செல்ல விரும்பியதை தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களின் படுக்கையறைக்குள் நுழைந்தான்.
அந்த அறையில் வீட்டின் உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அங்கு, டெபியூடிஸும், தனது ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக அவர்களுடன் படுத்து உறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது பாதுகாப்புக்காக கொண்டு சென்ற கத்தியையும் தனக்கருகில் வைத்துக் கொண்டு அவன் உறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்தின்பின் எழுந்த அவன் அருகில் தூங்கி கொண்டிருந்த வீட்டு உரிமையாளர்களின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளான்.
இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் ஆத்திரத்தில் எரிச்சலடைந்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, தனது துப்பாக்கியால் அந்நபரை 3 தடவைகள் சுட்டுள்ளான்.
ஆனால் இலக்கு தவறி விட்டது. இதற்கிடையே தனது ஆடைகளை மாட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
ஆனால் மற்றொரு வீட்டில் கொள்ளையடித்த போது அவன் பொலிஸாரிடம் சிக்கி கொண்டான்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டெபியூடிஸ் 310,000 டொலர் பிணையில் செல்லலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.