தேர்தல் பிரசார சுவரொட்டியில் நிர்வாணமாக தோன்றிய அரசியல்வாதி !

ஸ்பெய்னில் தேர்­தலில் போட்­டி­யிடும் பெண்­ணொ­ருவர் தனது நிர்­வாணப் புகைப்­ப­டத்­துடன் பிர­சார சுவ­ரொட்­டியை தயா­ரித்­ துள்ளார். யொலண்டா மொரின் எனும் இப்பெண், ஸ்பெய்னின் பிஸ்கே


மாகாணத்­ தி­லுள்ள போர்த்­து­கலேட் எனும் நகரின் மேயர் பத­விக்கு போட்­டி­யி­டு­கிறார். சுதந்­தி­ரத்துக்­ கான கட்சி எனும் வலது சாரி கட்­சியின் சார்பில் போட்­ டி­யிடும் அவர், தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக தனது நிர்­வாண புகைப்­ ப­டத்­துடன் சுவ­ரொட்­டியை வடி­மைத் ­துள்ளார்.

"அர­சி­யல்­வா­திகள் எம்மை நிர்­வா­ண­மாக தோன்­ற­வைத்­து­விட்­டார்கள்" என்ற அர்த்­தத்தில் எழு­தப்­பட்ட வாச­கங்­களால் புகைப்­ப­டத்தில் அவரின் அந்­த­ரங்­கப்­ப­கு­திகள் மறைக்­கப் ­பட்­டுள்­ளன. 

சுமார் 47,000 மக்கள் வசிக்கும் போர்த்­து­கலேட் நகரில் இட­து­சாரி சோஷ­லிசக் கட்­சியைச் சேர்ந்த மிகேல் டோரஸ் மேய­ராக பதவி வகிக்­கிறார். 

இந்­நி­லையில் இக்­கட்­சிக்கு சிறந்த மாற்­றாக தமது கட்­சியை மக்கள் மத்தியில் நிலைநிறுத்து வதற்கு தனது சுவரொட்டி உதவும் என யொலண்டா மொரின் நம்புகிறார்.
Tags:
Privacy and cookie settings